திரு. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் என் முதல் குரு.
அவர் மாகாபாரத கதையை அடிப்படையாக கொண்டு " வெண்முரசு " என்னும் நாவலை தினமும் ஒரு பகுதியாக இணையத்தில் எழுதிவருகிறார்.
venmurasu.in
அதை ஒலி வடிவமாக மாற்றவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உதித்தது. நாவலின் முதல் பாகம் "முதற்கனல்" ஐம்பது பகுதிகளை கொண்டது.
ஒரு பகுதி ஏழு பக்கம். அதை பிழை இல்லாமல் படித்து முடிக்க எனக்கு ஒரு மணி நேரம் தேவைபட்டது . அதை தொகுத்து வீடியோவாக மாற்ற மேலும் ஒருமணிநேரம் தேவைபட்டது. ஆக ஐம்பது பகுதிகளுக்கு நூறு மணி நேரம். கடந்த நான்கு மாதங்களாக பெரும் வேலை சுமைகளுக்கு நடுவே கிடக்கும் நேரங்களில் இது சாத்தியமானது.
இந்த கதையில் முக்கியமாக என்னை ஈர்த்தது அதில் வரும் வாழ்வியல் தாருங்கள் . அந்த தாருங்கள் நான் தினமும் சந்திக்கும் தாருங்கள்.
இதில் வரும் அறம் சார்ந்த விவாதங்களும், இந்திய மரபு சார்ந்த வாழ்வியலும், நிலப்பகுதிகளும் என் ஆழ்மனதில் பெரும் மாற்றத்தை உருவாக்குவதை நான் உணர்கிறேன்.
இந்த ஒலி வடிவம் உங்களுக்கும் உதவும் என்று நம்புகிறேன்.
நன்றி
கிராமத்தான்
வெண்முரசு - நூல் ஒன்று முதற்கனல்